சசிகலாவிடம் கதறிய ஜெயலலிதா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவிடம் தன்னை கருணை கொலை செய்து விடுமாறு கதறியதாக மலேசிய நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இணையவாசிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் , அவரது மரணமும் மர்மம் நிறைந்தது என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். தமிழக ஏதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஜெ., மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சிலநாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்தநிலையில் மலேசிய நண்பன் என்ற மலேசிய தமிழ் நாளேட்டில் இடம்பெற்ற செய்தி தலைப்புடன் ஒரு படம் வாட்ஸ அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் உள்ள செய்தியானது கடந்த 17-12-16 அன்று அந்த நாளிதழ் வெளியானதாக தெரிகிறது.

"கால்கள் இல்லாது என்னால் வாழ முடியாது... என்னை கருணை கொலை செய்துவிடு சசி... கதறினார் ஜெ., ? என்று கேள்வி குறியுடன் அந்த செய்தியின் தலைப்பானது இடம் பெற்றுள்ளது. இந்த தகவல்களை தாங்கிய அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.