பூனை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் கோப்பியின் விலை தெரியுமா?

Report
178Shares

புதிது புதிதாக ஏதோவொன்றை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது புனுகுப் பூனையின் கழிவுகளிலிருந்து வாசனை திரவியங்கள், புகையிலை பொருட்களின் நறுமணத்தை அதிகரிக்கவும் மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

அத்தோடு உலகின் விலை உயர்ந்த கோப்பியான லூக்கா கோபிக்கு புனுகு பூனையின் கழிவில் இருந்து தான் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த புனுகு பூனை கோப்பி பழங்களை விழுங்கி பின் அந்த கொட்டைகளை கழிவுகள் மூலம் வெளியேற்றுகிறது.

அந்த கழிவுகளில் இருந்து வெளியேறும் கொட்டைகளை சுத்தம் செய்து அதனை கோப்பி தூளாக பயன்படுத்துகின்றனர்.

வெளிநாடுகளில் இவ்வகையான கோப்பி தூள் 1 கிலோவின் விலை ரூ. இருபது ஆயிரத்தில் இருந்து இருபத்தைந்தாயிரம் வரை உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆபிரிக்கா புனுகுப் பூனைகள் மிகவும் பிரபலமானவை. தமிழகத்தில் மரணா என்னும் பெயர் புனுகுப்பூனைக்கு உண்டு.

புனுகு என்பது அந்த பூனையின் வால் பகுதியில் உள்ள இரண்டு சுரப்பிகளில் சுரக்கும் ஒரு வகையான வாசனை கலந்த திரவமே.

இந்த பிசின் போன்ற திரவம் தான் இந்த பூனையின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது

இந்த பூனையின் கழிவில் இருந்து தயாரித்த வாசனை திரவியத்துடன், குங்குமப்பூ, கற்பூரம், சந்தனம் ஆகியவற்றை சேர்த்து திருப்பதி கோயிலில் வெங்கடேஸ்வர சிலைக்கு பூர்ணா அபிஷேகம் செய்ய பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6424 total views