பாம்பு துரத்தினால் தப்பிப்பது எப்படி?

Report
81Shares

பாம்பு ஒருபோதும் நம்மைத் தேடிவந்து கடிப்பதில்லை. நாம் தான் தெரிந்தோ தெரியாமலோ அதன் வழியில் குறுக்கிட்டு அதனிடம் கடி வாங்குகிறோம்.

மலைப்பிரதேசங்களில் பல்வேறு வகையான விஷ பாம்புகள் காணப்படுகின்றன. இதில் 4 வகையான பாம்புகள் கடித்தவுடன் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உடனடியாக உயிர்பிரிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

நாகபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் போன்றவை நமது சூழலிலுள்ள மிக ஆபத்தான பாம்புகள். பாம்புக்கடியால் உயிரைவிடும் மனிதர்களில் 99 வீதமானோர் கடிபட்ட பயத்திலும், சரியான முதலுதவி இல்லாததாலும்தான் இறந்துபோகின்றனர்.

பெரும்பாலான பாம்புகள் மனிதர்களைத் துரத்துவதில்லை. அதிகமாகச் சீண்டப்பட்டதனால் மூர்க்கம் கொண்ட பாம்புகள்தான் சிலவேளைகளில் மனிதர்களைத் துரத்துகின்றன.

யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடவேண்டும்; பாம்பு துரத்தினால் நேராகதான் ஓட வேண்டும். பாம்புகள் துரத்தும் போது நாம் நேராக ஓடினால், வளைந்து, வளைந்து வரக்கூடிய பாம்பின் பாா்வை நம்மில் இருந்து தடைபட வாய்ப்புள்ளது.

3923 total views