பெண்களுக்கு உயரமான ஆண்களை பிடிக்க காரணம் இது தான்!

Report
272Shares

ஆண்களின் நிறம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை ஆனால், உயரும் குறைவாக இருக்கக் கூடாது என்று பெண்கள் நினைப்பார்கள். அப்படி நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.

உயரமான ஆண்களிடம் பெண்கள் இயல்பாகவே ஒருவித பாதுகாப்பை உணர்கிறார்கள். உயரமான ஆண் தன்னருகே இருந்தால், யாரும் தங்களை சீண்ட மாட்டார்கள் என்ற எண்ணம் பெண்களிடம் உள்ளது.

படுக்கை அறையில் உறங்கும் போது, அவர்களது மார்பு, கால் பகுதிகளுக்குள் ஒரு குட்டி பறவை போல சுருங்கி படுத்து உறங்குவதை பெண்கள் விரும்புவார்கள்.

திடீரென மழை வந்துவிட்டால், உயரமான ஆண்கள் குடை பிடிக்கும் போது, தலையின் மீது படாமல், ஜாலியாக நடந்து செல்லலாம்.

பெரிய அளவில் நடக்கும் ஏதேனும் விழாக்களுக்கு செல்லும் போது, நம்மை கூட்டத்தில் உயரமான ஆண்களால் ஈஸியாக கண்டுபிடிக்க முடியும்.

நடந்து செல்லும் போது கைகளை பிடித்து செல்வது போன்ற சின்ன சின்ன அழகான விடயங்களுக்காகவே உயரமான ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர்.

உயரமான ஆண்களை கட்டிப்பிடிக்கும் போது அவர்களது இதய துடிப்பை கேட்க முடியும். அவர்களது இதயமும், பெண்களது காதும் ஒரே உயர நிலையில் இருப்பதை பெண்கள் விரும்புகின்றனர்.

உயரமான ஆண்கள் வீட்டில் பல உதவிகளுக்கு சரியான தேர்வாக இருப்பார்கள். மேலடுக்கில் வைத்த பொருட்களை எடுக்க, வைக்க, சில அடிப்படை வீட்டு மேலாண்மை வேலைகள் செய்ய உதவியாக இருக்கும்.

உயரமான ஆண்களின் கால்கள் நீளமாக இருக்கும். உட்காரும் போது கூடுதல் ஸ்டைலாக இருக்கும். ஒரு கூட்டில் தஞ்சம் புகுந்தது போல, அவர்கள் காலுக்கு நடுவே அமர்ந்தவாறு ரொமாண்டிக் செய்வதை பெண்கள் விரும்புவார்கள்.

உயரமான ஆண்களை காணும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும். கருப்பு, வெள்ளை என்று எந்த வேறுபாடுமின்றி அவர்கள் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்புடன் தோற்றமளிப்பார்கள்.

9077 total views