பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி மகன்...மத்திய அமைச்சர் செய்த செயல்! வீடியோ

Report
478Shares

டெல்லியில் அலுவலகத்திற்குள் வைத்து இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உத்தம் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கால் செண்டரில் பணியாற்றும் இளம்பெணை வாலிபர் ஒருவர் கால்களால் உதைத்து பயங்கரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோ காட்சியானது கடந்த 2 ஆம் திகதி பதிவு செய்யப்ப்பட்டதாகவும், குறித்த வீடியோவில் இளம்பெண்ணைத் தாக்குவது ரோகித் சிங் தோமர் என்பதும், அவர் டெல்லி போலீஸ் அதிகாரியின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார் எனவும் கூறப்பட்டு வருகின்றனர்.

இருந்த போதிலும், சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையிலும் ரோகித் பொலிஸ் அதிகாரி மகன் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது.

ஆனால், இந்த வீடியோவை பார்த்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கை அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை டெல்லி போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் வாலிபரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

17153 total views