சக மாணவர்களால் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி! காரணம் என்ன தெரியுமா?

Report
255Shares

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபிரிந்து வருகிறார். இவரது மகள் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரியா தாம்பரம் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் சக மாணவிகள் பிரியாவை உடல் பருமனாக இருப்பதைக்கூறி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரியா ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் பிரியாவை வேறு வகுப்புக்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மாற்றப்படவில்லை. மேலும் சக மாணவிகள் கிண்டலை தொடர்ந்துள்ளனர். அத்துடன் அவருடன் பேசுவதையும் குறைத்துள்ளனர். இதனால் விரக்தியின் எல்லையில் சென்ற மாணவி மீண்டும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஆறுதல் கூறிவிட்டு எல்லாம் போகபோக சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது விரக்தியில் பிரியா மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பலத்த தீக்காயம் அடைந்த பிரியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

6598 total views