பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி பணத்தை ஆட்டையை போட்ட தம்பதி!....

Report
51Shares

சென்னை திருவொற்றியூரில் ஏலச்சீட்டு மற்றும் தங்க நாணயம் திட்டம் என பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரிபுரசுந்தரி நகரைச் சேர்ந்த லில்லி - எட்வின் தம்பதி, ஏலச்சீட்டு, எல்ஐசி சிறுசேமிப்பு தங்க நாணயம் திட்டம் என ஆசைவார்த்தை கூறி மாதா மாதம் பணம் வசூல் செய்துள்ளனர்.

ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு உரிய பணத்தை கொடுக்காததால், 25க்கும் மேற்பட்ட பெண்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் லில்லி மீது புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் பொலிசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2476 total views