அன்று அழகான டீச்சர்... இன்று பைத்திய டீச்சர்!... கண்கலங்க வைக்கும் உண்மையான காதல் கதை

Report
1662Shares

ஒரு காலத்தில் அழகான ஆசிரியராக வலம்வந்த பிரியதர்ஷினி தற்போது பைத்திய டீச்சர் என்ற பெயருடன் ஒரு கடை திண்ணையில் காலத்தை கழித்து வருகிறார்.

தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள தலசேரி ரயில் நிலையத்துக்கு அருகில், ஒரு கடை திண்ணையில் காலத்தை ஓட்டுபவர் பிரியதர்ஷினி டீச்சர். பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய இவரை, பைத்திய டீச்சர் என்றே அழைக்கின்றனர்.

இவர், இளமையில் திருவனந்தபுரம் - மங்களூரு வரை செல்லும் ரயில் ஓட்டுனரைக் காதலித்து வந்துள்ளார். தலசேரிக்கு ரயில் வரும்போதெல்லாம் அவரை சந்திக்க ரயில் நிலையத்திற்கு ஓடி வந்துவிடுவாராம் பிரியதர்ஷினி.

இந்நிலையில் விபத்து ஒன்றில் காதலன் பலியாக, அதை தாங்க முடியாமல் பைத்தியமாகியுள்ளார் பிரியதர்ஷினி. அன்றிலிருந்து தினமும் காலையில் ரயில் நிலையம் வந்து காதலனை தேடுயவர் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறாராம்.

இவரது கதையினை மலையாளத்தில் சினிமாவாக எடுத்துள்ளதாகவும், இப்படம் சக்கைப்போடு போட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

72320 total views