வலியால் துடித்துப்போன விவசாயி....பரிசோதனையில் அவர் வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா?

Report
5393Shares

ராஜஸ்தான் விவசாயின் வயிற்றிலிருந்த 10 கிலோ கட்டி சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

ராஜஸ்தான் மாநிலம் பிகனர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த 6 மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

வீங்கியிருந்த அவரது அடிவயிற்றை ஸ்கேன் செய்தபோது, 80 சதவீத வயிற்றை ஆக்ரமித்து கட்டி உருவாகி இருந்தது தெரிந்தது. இதனால் அவரது குடல்களும் இடது பக்கமாக நகர்த்தப்பட்டிருந்தன. மேலும் கட்டி காரணமாக அவரது கல்லீரல், இரு சிறுநீரகம், வயிறு மற்றும் மண்ணீரலும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டியை உடலில் இருந்து அகற்ற வேண்டுமானால் இதய தமணி, சிறுநீரக தமணிகள் போன்றவற்றில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாது.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை நீண்ட ஆலோசனைக்கு பின் ஸ்ரீகங்கா மருத்துவமனை மருத்துவர்கள் 10 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் வெற்றிகரமாக அகற்றினர். இதன் எடை 10 கிலோ ஆகும்.

இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறுகையில், ‘விவசாயின் வயிற்றில் இருந்த கட்டி ஒரு வகை புற்றுநோய் கட்டியாகும். நாங்கள் கண்டறிந்ததில் இதுவே மிகப்பெரிய லிபோசார்கோமா கட்டியாகும். அறுவை சிகிச்சைக்கு பின், விவசாயி இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளார்’ என்று கூறினார்.

157510 total views