ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சிறுமி: கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய சச்சின்!

Report
951Shares

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகாலஷ்மி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்த சிறுமியை கண்ணிமைக்கும் நேரத்தில் பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சியை, ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் கூறியதாவது, சச்சின் போலின் மனதைரியம் பாராட்டக்கூடியது. அவரால் மகாலஷ்மி ரயில் நிலையத்தில் உயிர் காப்பாற்றப்பட்டது. மகாராஷ்டிரா பாதுகாப்பு படையின் ஜவானைப் பற்றி நாம் பெருமையடைகிறோம்" எனக் கூறியுள்ளார்.

35086 total views