கேஸ் சிலிண்டரால் தலையில் அடித்த கணவர்! துடிதுடித்து பரிதாபமாக பலியான மனைவி?

Report
175Shares

மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, அவரை கேஸ் சிலிண்டரால் கணவன் அடித்துக் கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஷீர் முகம்மது. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

அவருக்கு ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில், மூன்றாவதாக பாத்திமா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

பாத்திமாவுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது, பஷீர் அகமதுக்கு பாத்திமாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

பஷீர் அகமது கடந்த ஆறுமாதம் முன்பு வெளிநாடு சென்றுள்ளார். சமீபத்தில் ஊருக்கு வந்த அவருக்கு மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாத்திமா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பஷீர் அகமது ஜமாத் மூலம் பேசி இருவரும் மறுபடி ஒன்று சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து, பாத்திமா தூங்கிக் கொண்டிருந்த போது பஷீர் அகமது எரிவாயு சிலிண்டர் எடுத்து அவரின் தலையில் அடித்துள்ளார். இதில் பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

6767 total views