மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியர் - வீட்டை பூட்டிக்கொண்டு அடம்!

Report
293Shares

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவியின் வீட்டுக்கு போலீஸார் சென்ற நிலையில் அவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வர மறுத்துள்ளார்.

இதனால் 2 மணி நேரம் காத்திருந்துவிட்டு போலீஸாரும், வட்டாட்சியரும் திரும்பி சென்றனர்.

அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் ஆசையை பூர்த்தி செய்ய 4 மாணவிகளிடம் செல்போனில் படுக்கைக்கு அழைக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களும் மாதர் சங்கங்களும் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தின.

இதையடுத்து கல்லூரி முதல்வரின் புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்த அருப்புக்கோட்டை கவிதா நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸாரும் வட்டாட்சியிர் சிவ கார்த்தியாயினியும் சென்றனர்.

அவரது வீடு உள்பக்கமாக பூட்டியுள்ளது. கதவை திற நிர்மலா தேவி மறுத்துவிட்டார். இதையடுத்து போலீஸார் அங்கு 2 மணிநேரமாக காத்திருந்தனர்.

எனினும் அவர் வெளிய வரவில்லை. நிர்மலா வெளியே செல்லவில்லை என்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து அவரது உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்தவுடன் கதவை உடைத்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

8971 total views