சடலமாக மீட்கப்பட்ட 11 வயது சிறுமி... 86 இடங்களில் தாக்கப்பட்டு கொடூர கொலை

Report
1401Shares

காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஆஷிபா கூட்டு வன்வுணர்பு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் கொந்தளிப்பு அடங்கும் முன்பு தற்போது குஜராத்தின் சிறுமி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாநிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற குதிரையை தேடி சென்ற 8 வயது சிறுமி காணாமல் போனார். ஒரு வாரம் கழித்து வனப்பகுதியில் ஆஷிபா உயிரற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் குஜராத்தில் உள்ள சூரத்தில், கிரிக்கெட் மைதானம் அருகே உடலில் சுமார் 86 இடங்களில் காயங்களுடன் 11 வயது சிறுமியின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை அந்த சிறுமி யார் என்ற அடையாளம் காணப்படவில்லை. காணாமல் போனவர்கள் முறைப்பாடுகளில் அடிப்படையில் உடலை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குற்றவாளிகளை தேடும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சிறுமி கொடூரமாக பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் பிறப்புறப்பு மற்றும் உடம்பில் மொத்தம் 86 இடங்களில் கட்டையால் தாக்குப்பட்ட காயங்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

42112 total views