குழந்தையை தூங்க வைக்க தாய் செய்த காரியம்!.. கடைசியாக உயிரிழந்த பரிதாபம்

Report
514Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் மதுரவாயலைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு லோகேஸ்வரி(4) என்ற மகளும், பிரகதீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் இருந்தது.

5 நாட்களுக்கு முன், சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அழுதுள்ளது. இதையடுத்து லோகேஸ்வரி குழந்தையை தூங்கவைப்பதற்காக தொட்டிலை வேகமாக ஆட்டியுள்ளார்.

அப்போது அருகிலிருந்த கட்டில் மீது குழந்தையின் தலை மோதியிருக்கிறது. இதனை அசால்டாக விட்டுள்ளார் தாய் லோகேஸ்வரி.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தையின் தலை வீங்கி இருந்தது கண்டு பெற்றோர்கள் பதறியடித்து, குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்னர் பிரகதீஸ்வரனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பிரகதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தால் குழந்தையின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

17491 total views