தாயின் இடுப்பிலிருந்தபோது நேர்ந்த சோகம்... பரிதாபமாக பலியான ஒன்றரை வயது குழந்தை

Report
724Shares

மாம்பலத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் துணிக்காய வைத்தபோது இடுப்பில் இருந்து நழுவிய குழந்தை 2 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தது.

சென்னை மாம்பலம் துக்காராம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் முத்துராஜ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.

இவர்கள் வீட்டின் 2வது மாடியில் வசித்து வந்தனர். இன்று கண்ணன் வேலைக்கு சென்றதும் மகேஸ்வரி வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்துள்ளார்.

துணிகளை துவைத்த மகேஸ்வரி, மகன் கண்ணனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு அவற்றை காயப்போட்டுள்ளார். சுவர் ஓரம் நின்று அவர் துணியை காயப்போட்டபோது இடுப்பில் இருந்து திமிறிய குழந்தை எதிர்பாராதவிதமாக இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

இதில் குழந்தை முத்துராஜ் தலையில் பலத்த காயமடைந்தான். இதனை சற்றும் எதிர்பாராத மகேஸ்வரி அலறியடித்துக்கொண்டு கீழே ஓடினார். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இரண்டாவது மாடியில் இருந்து குழந்தை நழுவி கீழே விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை பறிகொடுத்துவிட்டு தாய் மகேஸ்வரி கதறிய காட்சி துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

23994 total views