தமிழகத்தை தொட்டால் இந்தியாவின் அழிவு ஆரம்பம்! நிர்வாகமே ஆட்டம் கண்டுவிடும்? வெளிவந்த அதிரடி ரிப்போர்ட்

Report
840Shares

தமிழகத்கை பிரித்து விட்டால் இந்திய நிர்வாகமே ஆட்டம் கண்டுவிடும் என்று ஆங்கில இணையம் அதிரடி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்றும் ஆங்கில இணையதள ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆட்டோ மொபைல், அரிசி விவசாயம், தோட்டங்கள், சுற்றுலா, ஆயத்த உடைகள் ஏற்றுமதி, இந்தியா முழுவதுமான பட்டாசு உற்பத்தி, துப்பாக்கி டாங்கி தொழிற்சாலை, ஹிந்திக்கு அடுத்தப்படியாக சினிமா தொழிற்துறை, டெல்லிக்கு பிறகு அனைத்து நாட்டு தூதரகங்களும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் என்பது மிக முக்கியமானது.

ஒட்டுமொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வட,கிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம் என்றும் புள்ளிவிபரவியல் குறிப்பிடுகின்றது.

இந்தியாவிலேயே செல்வ வளம் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.

1960இல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு. இன்று இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்கிறது.

உலக நாடுகளில் கிட்டத்தட்ட 5 நாடுகளில் தேசிய மொழியாக தமிழ் மொழி உருவெடுத்துள்ளது. இரண்டாம் மொழியாக அங்கீகாரத்துக்கு 20 நாடுகளில் காத்திருக்கும் ஒரே மொழியும் தமிழ்தான்.

இப்படி இருக்கும் போது தமிழகம் பிரிந்தால் இந்தியாவின் நிர்வாகமே ஆட்டம் கண்டுவிடும் என்பது உறுதி. தமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அதற்கு தெரிவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

34070 total views