இனி அலைபாயுதே படத்தை போல திருட்டுத் திருமணம் செய்ய முடியாது? காதலர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

Report
426Shares

திரைபடங்களில் வரும் காட்சி போல இனி பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்ய முடியாது.

திருமணங்களைப் பதிவு செய்வதற்கு பெற்றோர்களின் அடையாள அட்டைகள் கட்டாயம் அவசியம் என்று திருமணப் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

திருமணச்சட்டம்

இந்திய திருமணச்சட்டத்தின் படி திருமணத்தன்று ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட வயது வருவதற்கு முன்னால் நடத்தி வைக்கப்படும் திருமணங்களைத் தடுக்கவும், ஏற்கனவே நடந்த திருமணங்களை மறைப்பதைத் தடுக்கவும் திருமணப்பதிவை அரசாங்கம் கட்டாயமாக்கியது.

தமிழ்நாடு திருமணச்சட்டம் 2009ன் படி திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் பதிவு செய்ய 60 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மணமக்களின் பெற்றோர் மீது வழக்குப் போடவும் சட்டத்தால் முடியும்.

இனி சுலபம் இல்லை

திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ், கோயில், தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாக அலுவலகங்களில் திருமணம் நடந்ததாகக் கொடுக்கும் ஆவணம் நோட்டரி போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது பெற்றோரின் சம்மதத்துடன் நடந்த திருமணம் எனில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் செய்யப்படும் காதல் திருமணங்களைப் பதிவு செய்வது இனி சுலபமில்லை.

இந்து திருமண சட்டத்தின்படி இந்துக்களின் திருமணம் பதிவு செய்யப்படுகின்றது. திருமண வயது நிரம்பிய ஆணோ, பெண்ணோ தங்கள் மனம் கவர்நதவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

இதற்கு பெற்றோர் மற்றும் உறவினரின் சம்மதமும் தேவை என குறிப்பிட்டிருக்கவில்லை. ஆண், பெண் இருவரும் அவர்களுக்கு உரிய ஆவணங்களுடன் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டின் இறுதியில் திருமணத்தைப் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை சுற்றறிக்கை மூலம் அனுப்பியது திருமணப்பதிவுத்துறை.

அந்தப்பட்டியலில் இடம் பெற்றவை
  • திருமணம் செய்யவிருக்கும் ஆண் பெண் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  • வயதுக்கான சான்றிதழாகப் பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மணமக்கள் தலா நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும்.
  • இதற்கென உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவுத்துறை அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.
  • குறிப்பிட்டுள்ள பெற்றோர் மற்றும் சாட்சியாளர்கள் ஆகியோரின் அசல் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும்.
15887 total views