சில விவசாயிகளின் அலட்சியமே தேனி குரங்கணி தீ விபத்துக்கு காரணம்.. சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்

Report
285Shares

அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர்களுடன் அனுமதி பெற்றுதான் மலைக்குள் சென்றதாக டிரெக்கிங் கிளப் விளக்கமளித்துள்ளது.

தேனி குரங்கணி காட்டுத்தீ காரணமாக தற்போது மொத்தம் 11 பேர் இறந்துள்ளனர். இந்த மலையேற்றத்திற்கு அனைவரையும் சென்னை டிரெக்கிங் கிளப் என்ற நிறுவனம்தான் ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது குரங்கணி தீ சம்பவத்தில் இறந்தவர்களுக்காக இரங்கலை தெரிவித்து அந்நிறுவனம் அதற்கான விளக்கத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் சென்றும் விபத்து ஏற்பட்டுள்ளது.

அனுமதி வாங்கிதான் சென்றோம்

திவ்யா, நிஷா என்ற பெண்களும் அருண், விபின் என்ற அனுபவமிக்க ஆண்களும் தான் குழுவை வழி நடத்தினார்கள். இவர்களுக்கு 7 வருட மலையேற்ற அனுபவம் உள்ளது. நாங்கள் ஏற்கனவே அக்காட்டுகுள் சென்றிருக்கிறோம். வனத்துறையிடம் எப்போது சென்றாலும் அதற்கான அனுமதி வாங்கி முறையான கட்டணம் செலுத்தி தான் கடந்த மார்ச் 10 தேதி காட்டுக்குள் சென்றோம். நாங்கள் செல்லும் போது தீ எங்கும் இல்லை.

காரணம் விவசாயிகள்

பின் மார்ச் 11ல் திரும்பி பாதி வழியில் வந்து கொண்டிருந்த போது சில விவசாயிகள் புற்களை எரித்துக் கொண்டிருந்தார்கள். இதனால் காற்று அதிகமாக வீசியதால் தீ மற்ற இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது. இதுதான் பிரச்சனை. அறுவடை முடிந்து விளைநிலங்களில் இருக்கும் கழிவுகளுக்கும் புற்பூண்டுகளுக்கும் தீ வைப்பது வழக்கம்தான். பெரிதளவில் வானிலை மாற்றம் ஏற்பட்டதாலும் தீ மலை முழுவதும் பரவி இருக்கலாம்.

எதிர்பாராத இறப்பு

குழுவை வழி நடத்திய திவ்யா, அருண், விபின் இதில் பல உயிர்களை காப்பாற்றி இறந்துள்ளனர். எங்களால் முடிந்த அளவிற்கு கட்டிப்படுத்த முயன்றும் முடியாமல் போனாதால் இறந்தவர்களின் இழப்பை தாங்கி கொள்ள முடியவில்லை என்று விளக்கத்தில் கூறியிருந்தனர்.

12352 total views