மகனின் புதிய காரை தீவைத்து கொளுத்திய தாய்... கதிகலங்க வைக்கும் காரணம்

Report
1174Shares

மகனின் காரை மாமியார் மருமகள் சண்டையால் தீயிட்டுக் கொளுத்திய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவரது தாய்க்கும் மனைவிக்கும் இடையே ஏற்கனவே நீயா நானா என்ற பிரச்சனை இருந்துள்ளது. அதனால் தாயை தனி வீட்டில் வைத்துள்ளார் மகன்.

இந்நிலையில் ராஜேந்திரன் ஹூண்டாய் ஐ 20 என்ற காரை அண்மையில் வாங்கியுள்ளார். அந்த காரில் தன் மனைவியை கூட்டிச்சென்றுள்ளார். இதை பொருக்காத ராஜேந்திரனின் தாய் இந்திராணி காரை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.

காரின் முன்பக்கம் முழுவதும் எரிந்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையீனர் தீயை வந்து அணைத்தனர். மண்ணெண்ணை கேனுடன் இந்திராணி செல்லும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.

46658 total views