முகத்தில் ஆசிட்டால் பாதித்த இளம்பெண்...காதலை நிருபித்த இளைஞன்..நெகிழ்ச்சி சம்பவம்

Report
403Shares

ஒடிசாவின் ஜகத்பூரில் 9 வருடங்களுக்கு முன் மர்ம நபர்களால் ஆசிட் வீசப்பட்டு தன் முகத்தின் அழகையும், பார்வையையும் இழந்தவர் பிரமோதினி. கடந்த 9 மாத கால சிகிச்சைக்கு பின் பணம் இல்லாமல் பாதியில் சிகிச்சையை விடுத்து வீடு திரும்பினார்.

5 ஆண்டுகளாக தன்னை பாதுகாத்த செவிலியர் சாகு என்பவரின் அறிமுகம் கிடைத்ததால் பிரமோதினி உடல்நலம் சரியாக காரணமாக இருந்துள்ளார். ஸ்டாப் ஆசிட் அட்டாக்' என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்காக பிரமோதினி 2016-ம் ஆண்டு டெல்லி சென்றதால், சாகுவால் பிரிந்து வாழ முடியாமல் பிரமோதினியை போனில் தொடர்பு கொண்டு தனது மனதில் உள்ள காதலை கூறினார்.

இதையடுத்து தனக்கு கண் பார்வை இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என கூறியும் சாகுவின் முயற்சியால் 20 சதவீதம் பார்வை கிடைத்துள்ளது. இந்நிலையில், இருவரும் காதலர் தினமான பிப்ரவரி 14ல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இருவரும் அடுத்த ஆண்டு இதே நாளில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் காபி பார் வைத்து ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதே இருவரின் திட்டமாக வைத்துள்ளனர்.

13285 total views