தனது தாய் இறந்தது தெரியாமல் உடல் அருகே உறங்கிய மகன்...நெஞ்சை உருகவைத்த சோகம்...

Report
799Shares

ஐதராபாத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல், அவர் அருகிலேயே 5 வயது மகன் படுத்து தூங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீனா சுல்தானா என்ற பெண் உடல் நலக்குறைவு காரணமாக ஒஸ்மானியா அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருடன் 5 வயது மகனும் இருந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுல்தானா நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துள்ளார். ஆனால், தனது தாய் இறந்துவிட்ட துயரமான சம்பவம் நடந்தது தெரியாமல் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த 5-வயது சிறுவன் தனது தாயின் அருகே 2 மணிநேரம் படுத்து உறங்கியுள்ளான்.

இதையடுத்து ஹைதராபாத் உதவும் கரங்கள் அமைப்பானது இளம் பெண் வைத்திருந்த ஒரு சிறிய பையில், ஆதார் கார்டு மூலம் பெற்றோரை கண்டுபிடித்து, இறந்த உடலையும், சிறுவனையும் ஒப்படைத்துள்ளனர். இந்த காட்சி பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

27129 total views