1 லட்சம் ரூபாய்க்கு சிறுமியை வாங்கி இரண்டாவது திருமணம் செய்த நபர்: கோபத்தில் ஊர்மக்கள் செய்த செயல்!

Report
772Shares

நாகர்கோவிலில் 1 லட்சம் ரூபாய்க்கு சிறுமியை விலைக்கு வாங்கி இரண்டாவது செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த ராபர்ட் பெர்லார்மின் என்ற மீனவர் தான் இந்த செயலை செய்துள்ளார்.

ஆதாவது, ஏற்கனவே திருமணமான இவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு சிறுமியை விலைக்கு வாங்கி, அவளை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த ஆத்திரத்தில் அவரை தாறுமாறாக திட்டியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து, பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்த பொலிசார் உடனடியாக வந்து சிறுமியை மீட்டுள்ளனர்.

ஆனால், பொலிசார் வரும் விடயம் பெர்லார்மினுக்கு தெரிய வரவே, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் யார் அந்த சிறுமி..? எதற்காக அவளை விற்றனர்.? உண்மையில் அவர்களுடைய பெற்றோர்கள் தானா ..? என பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது

28410 total views