மனைவி உதவியுடன் 14 வயது மைத்துனியை திருமணம் செய்த வாலிபர்!! பின் நடந்த விபரீதம்!!

Report
1977Shares

மனைவியின் சம்மதத்தோடு கணவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மச்சினிச்சியை திருமணம் செய்த கணவன் மனைவி கைதாகியுள்ளனர்.

பொன்னேரியை அடுத்த வேன்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 16 வயது மற்றும் 14 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், அருணனின் மூத்த மகளுக்கும், பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்த சுமன் என்ற வாலிபருக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பெரிய பாளையம் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு அந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே அவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வருகிறது. இதனால் அருணிடம் உன்னுடைய முதல் மகள் உடல்நலக் குறைவால் இருக்கிறார், அதால் உங்களின் 2-வது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சுமன் கேட்டுள்ளார். அதற்கு மாமனார் அருணும், அவரது மாமியார் மகாலட்சுமியும் சம்மதித்தனர்.

அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் இரண்டாவது மகளை சுமன் கடந்த 7-ந்தேதி பெரிய பாளையம் கோவிலில் வைத்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே, திருமணமான இந்த பெண் பள்ளிக்கு சில நாட்கள் வராததால் அவரது தோழிகள் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது மாணவியின் கழுத்தில் தாலி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தோழிகள் மாணவியிடம் விசாரித்தனர்.

அப்போது அவள் தனக்கு அக்காளின் கணவருடன் 2-வது திருமணம் நடந்ததாக கூறினார். இது தொடர்பாக மாணவியின் தோழிகள் பென்னேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழு தலைவிக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணமகன் சுமன், திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் பெற்றோர் அருண், மகாலட்சுமி மற்றும் சுமனின் மனைவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

71778 total views