மனைவியின் அந்த நிலையால் பொறாமைப்பட்ட கணவன்.... பின்பு நடந்த கொடூரமான சம்பவம்

Report
921Shares

இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் தன்னைவிட மனைவி நல்ல வேளையில் இருந்ததால் பொறாமையில் கணவன் மனைவியை அடித்தே கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் குல்தீப் ராகவ். இவருக்கும் ரிச்சா சிசோடியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து ரிச்சா தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். ஆனால் குல்தீப்க்கு சரியாக வேலை கிடைக்காததால் மளிகை கடையில் உதவியளாராக வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் தன் மனைவி நல்ல நிலையில் இருக்கிறாளே என்ற பொறாமை குல்திப்க்கு ஏற்படவே ஒரு கட்டத்தில் மனைவி மீது கோபம் ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு இருவருக்கும் சண்டை அதிகமானதால் ஆத்திரமடைந்த குல்தீப் ரிச்சாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ரிச்சா பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

37603 total views