எந்த ஆண்டும் இல்லாத கடும்பனியால் சூழ்ந்த சென்னை!!

Report
45Shares

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்தனர். இதனால், எழும் கடும் புகையாக உள்ளது. மேலும் கடும்பனியால் பாதிக்கப்பட்டுள்ளது சென்னை இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போகி புகை மற்றும் அடர் பனிமூட்டத்தினால் சென்னையில் இன்று விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. விமான ஓடுபாதை தெரியவில்லை.

சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, கடும் புகை மண்டமாக காட்சி அளிக்கிறது. மார்கழி கடைசி நாள் என்பதால் கடும் பனி மூட்டம் உள்ளது. இந்த பனியுடன் போகி புகையும் சேர்ந்ததால் சென்னை முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

லண்டனில் இருந்து இன்று அதிகாலையில் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மொத்தம் 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2186 total views