மதுபோதையில் பாட்டியை கட்டையால் அடித்து கொன்ற பேரன்.... காரணம் என்ன தெரியுமா?

Report
273Shares

பெரியகுளம் அருகே மதுகுடிக்க பணம் கொடுக்காததால் போதையிலிருந்த பேரன் பாட்டியை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியில் கருப்பாயி அவருடைய தாய் ஒச்சம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பாயின் மகன் ராஜா வீட்டிற்கு கொள்ளுபேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக பாட்டி ஒச்சம்மாள் சென்றுள்ளார்.

அப்போது குடித்துவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வந்த ராஜா மனைவி மீனாட்சியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் பாட்டி ஒச்சம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். பணம்தர ஒச்சம்மாள் மறுத்ததையடுத்து அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து மகள் கருப்பாயியுடன் உடனடியாக ஜெயமங்கலம் காவல் நிலையம் சென்று பேரன் ராஜாவின் கொலை மிரட்டல் குறித்து ஒச்சம்மாள் புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கு பொலிஸ் மது போதையில் இருப்பவரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள முடியாது எனவும், காலையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். மீண்டும் வீட்டுக்கு இருவரும் வருவதை பார்த்த பேரன் ராஜா உருட்டுகட்டையை கொண்டு தாக்க முயன்றுள்ளார். இதனை கண்ட கருப்பாயி அங்கிருந்து தப்பிவிட பாட்டி ஒச்சம்மாளை பேரன் ராஜா கண்மூடித்தனமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு மறைந்திருந்த கொலையாளி ராஜாவையும் பொலிசார் கைது செய்தனர்.

முன்கூட்டியே மூதாட்டி அளித்த புகார் மீது பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

10431 total views