தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உருக்கமான இண்ஸ்டாகிராம் பதிவு

Report
193Shares

ஹைதராபாதைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலைதளமான இண்ஸ்டாகிராமில் அவரது இறுதி வார்த்தைகள் உருகவைத்துள்ளது.

ஹைதராபாத்தில் துண்டிக்கல் காவல்நிலை எல்லைக்குட்பட்ட சுராராம் காலனியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சாய் துர்கா. இவர் கடந்த புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்று காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மிக மோசமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வொன்றையும் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். எனது மோசமான வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று நம்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட சமபவத்தன்று பெண்ணிற்கும் அவரது தாய்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வீடு திரும்பிய பெற்றோர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் தற்கொலை குறித்து எந்த கடிதமும் அவர் எழுதிவைக்கவில்லை என்று இதனை மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

5603 total views