நவராத்திரி ஸ்பெஷல் : அம்மா உருவ பொம்மை !!

Report
68Shares

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை விற்பனைக்கு வரவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகைகைக்கு புதுவகை சிலைகள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்த வருடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை விற்பனைக்கு வரவுள்ளது.

சென்னையில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்ற சிற்பி இந்த சிலையை உருவாக்கியுள்ளார்.

தேசிய தலைவர்களான மகாத்மா காந்தி , நேரு உட்பட மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உருவ பொம்மைகளை இவர் செய்துள்ளார்.

இது கூறித்து அவர் சின்னதுரை கூறுகையில் ‘ நான் பல தலைவர்களின் உருவ பொம்மைகளை செய்திருக்கிறேன். ராஜிவ் காந்தி கொலைக்கு பிறகு அவருடைய உருவ பொம்மை செய்திருக்கிறேன் . இந்த நவராத்திரி பண்டிகைக்கு மறைந்த முன்னாள் முதலவர் அம்மாவின் சிலையை செய்திருக்கிறேன். நான் செய்யும் பெண்கடவுள்களில் ஒருவராக அம்மாவின் உருவ பொம்மை, இந்த வருடம் அனைவரது வீட்டு கொலுவிலும் இடம்பெறும் ’ என்று கூறினார்.

அம்மாவின் உருவத்தை பச்சை நிற புடவையில் தத்ரூபமாக ஒரு அடி உருவ பொம்மையாக செய்துள்ளார். ஒரு அடி சிலைக்கு சின்னதுறை 1200 ரூபாய்க்கும் , குட்டி சிலை 700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது .

2436 total views