இந்த ஆண்டு 7.5 லட்சம் பேர் தரிசனம் செய்த கோவில் எது தெரியுமா??

Report
127Shares

கடல் மட்டத்திற்கு 10 ஆயிரம் அடி உயரத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலில் ஏழுமலையான் விஷ்ணு எனும் நாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

விஷ்ணு கோவிலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதை இந்துக்கள் கடமையாக கருதுகின்றனர்.

வாழ்நாளில் ஒரு முறையாவது பத்ரிநாத் தரிசனம் காண வேண்டும் என்பது ஆன்மிக அன்பர்களின் குறிக்கோளாகும். உலகம் முழுவதிலும் இருந்து பத்ரிநாத் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். பனி மூடிக்கொள்வதால் குளிர் காலம் முழுவதும் கோயில் மூடப்படும். குளிர்காலம் முடிந்த பின், நடை திறக்கப்படும்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 6-ம் தேதி யாத்ரீர்கள் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்பட்டது. குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு செப்டம்பர் 10-ம்தேதி கோவில் நடை மூடப்பட்டது.

இந்த ஆண்டு பத்ரிநாத் கோயிலுக்கு சுமார் 7.5 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் 11.50 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டில் 9.25 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

என கோவில் நிர்வாகி பி.டி.சிங் கூறியுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டில் பத்ரிநாத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

4541 total views