மாணவியை கொலை செய்த மாணவன்!

Report
746Shares

ஐதராபாத்தில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன மாணவி சாந்தினி ஜெயின், தனது உடன் படித்து வந்த பால்ய நண்பரால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

ஐதபாராத்தின் புறநகர் பகுதியில், நேற்று உடல் சிதைந்த நிலையில் 17 வயது பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது. அதை கைப்பற்றி, இறந்தவர் யார் என்று விசாரணை செய்தபோது, அந்த உடல் கடந்த சனிக்கிழமை காணாமல்போன சாந்தினி ஜெயினின் உடல் என்பது தெரிய வந்தது.

ஐதராபாத்தை கிஷோர் ஜெயின் மற்றும் கவிதா ஜெயின் ஆகியோரின் மகள் சாந்தினி ஜெயின். சம்பவத்தன்று இவர் மடினகுடாவிலுள்ள தனது வீட்டிலிருந்து மாலை சுமார் 5.30 மணியளவில் தனத நண்பர்களை சந்திக்க செல்வதாக, தனது சகோதரியிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

இரவு நேரமாகியும் சாந்தினி வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் அவரது போனுக்கு கால் செய்தனர். ஆனால், அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவரது நண்பர்களிடம் விசாரித்து வந்தனர்.

இரவு வெகு நேரமாகியும் அவர் திரும்பாததால், இதுகுறித்து காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது.

மறுநாள் காலை 8.30 மணியாகியும் அவர் திரும்பாததால், பெற்றோர்கள் பல இடங்களுக்கு சென்று தேடத்தொடங்கினார்கள்.

சாந்தினி மாயமானது குறித்து அம்மீர்பூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து அம்மீர்பூர் பொலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது,

சாந்தினி காணாமல் போனது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவியின் பதிவுகளை ஆராயத் தொடங்கினோம். சம்பவத்தன்று அவரது , அவரது வீட்டிற்கு அருகே ஒரு ஆட்டோ ரிக்சாவில் அவர் ஏறியது தெரிய வந்தது. பின்னர் அந்த ரிக்சாக்காரரை விசாரித்தபோது, அந்த பெண் தனது நண்பர்களுடன் மலைப் பகுதிக்கு சென்றதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து அவருடன் சென்ற மூன்று இளைஞர்களும் விசாரிக்கப்பட்டனர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது என்றார்.

சாந்தினியை கொலை செய்த குற்றவாளி அவரது பால்ய கால நண்பன் என்றும், அவனும், சாந்தினியை அவர்களது பெற்றோர்களுடன் இணைந்து தேடுவது போல நாடகமாடியதும் தெரிய வ்ந்துள்ளது.

தொடக்கத்தில் மாணவி புளுவேல் விளையாட்டு காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் நினைத்தோம். ஆனால், அந்த பெண்ணின் நண்பர்களிடம் நடைபெற்ற விசாரணையின் காரணமாகவே அந்த 17வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக கூறினார்.

சாந்தினியின் நண்பர்கள் 3 பேரும் அவருடன் பால்ய காலத்திலே இருந்தே ஒரே பள்ளியில் படித்து வந்த தோழர்கள் என்றும், 2015ம் ஆண்டு முதல் அவர்களுக்குள் காதல் இருந்தாகவும், ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக சாந்தினி அவர்களிடம் இருந்து தனது அன்பை முறித்துக்கொள்வதாக கடந்த 6 மாதமாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இருந்தாலும் அவர்கள் சாந்தினிக்கு தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி அவரை அழைத்ததாகவும், இன்று இறுதி முடிவு தெரிவிப்பதாக கூறி, அவரை மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அவரது தலையில் மற்றும் கழுத்தில் அவளது அடிவயிற்றில் மிதித்தும் மலையில் இருந்து 10 அடி ஆழமான பகுதிக்கு கீழே தள்ளி தள்ளி கொலை செய்துள்ளனர்.

அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி ஏறக்குறைய யாரும் செல்ல முடியாத புதர்கள் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதி என்றும் கூறினர்.

மேலும் இளம்பெண் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு செல்லும் பாதையானது ஒரு மோட்டார் சைக்கிள் செல்லும் அளவுக்கே இருப்பதாகவும், அந்த பகுதி முழுவதும் பாறைகள், கற்கள் நிறைந்த பகுதியாக காணப்பட்டது என்றும் போலீஸ் அதிகாரி ராம் ரெட்டி கூறினார்.

காதல் காரணமாக ஒரு இளம்பெண் அநியாயமாக கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

19709 total views