ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி பிரதே பரிசோதனை செய்ய கோரி தொடரப்பட்ட மனு ஒத்தி வைப்பு!

Report Aravinth in இந்தியா
135Shares

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அக்டோபர் மாதத்துக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 77 வயதான மியாஜான் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தார்.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை அனைத்துமே மர்மமான முறையில் இருந்தது. எனவே, ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, முன்னணி வைத்தியர்களைக் கொண்டு கொண்டு பிரேத பரிசோதனை செய்ய இந்திய மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்கவும், உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இதே கோரிக்கையுடன் ஏற்கனவே 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவை அக்டோபர் 23ம் திகதி விசாரணைக்கு வருகின்றன. அந்த வழக்குகளுடன், இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.