பணக்கார பிச்சைக்காரர்களும், அவர்களின் சொத்து மதிப்பும்... ஷாக் ஆகிடாதீங்க

Report
841Shares

இந்தியா ஏழை நாடு இல்ல அறிவு, அதோட செல்வத்த எல்லாம் கருப்பு பணமா பதுக்கி வெச்சுருக்காங்க. அதனால எவ்வளோ ஏற்ற தாழ்வு பாரு, பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆயிட்டே போறான். ஏழை இன்னும் ஏழை ஆயிட்டே போறான். இது சிவாஜி படத்தில் ரஜினி பேசும் வசனம்

ஆனால், இதே இந்தியாவில் லட்சக்கணக்கில் வங்கி இருப்பு, சொந்தமாக அடுக்கு மாடி குடியிருப்பு வைத்திருக்கும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும். அதிலும், மும்பையில் பிச்சை எடுப்பவர்கள் பலர் வங்கி இருப்பு, லைப் இன்சூரன்ஸ் எல்லாம் வைத்திருக்கிறார்கள்.

பாரத் ஜெயின்

பாரத் ஜெயின், இவரது வயது 49. இவர் மும்பை நகர் பகுதிக்கு அருகாமையில் வசித்து வருகிறார். இவர் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புக்கு சொந்தக்காரார். சராசரியாக இவர் மாதத்திற்கு 7,500 ரூபாய் பிச்சை எடுத்தும், இவருக்கு சொந்தமான கடை மூலமாக கிடைக்கும் வாடகை மூலமாக 10,000 ரூபாயும் சம்பாதிக்கிறார்.

சாம்பாஜி காலே

சாம்பாஜி காலே எனும் இவர் இவரது குடும்பத்துடன் பிச்சை எடுத்து வருகிறார். கார் (Khar) எனும் பகுதியில் இவர் பிச்சை எடுக்கிறார். ஒரு நாளுக்கு 1000 - 1500 ரூபாய் வரை இவர் பிச்சை மூலம் சம்பாதிக்கிறார். இவருக்கு சொந்தமாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பும். சோலாபூர் பகுதியில் இரண்டு நிலங்களும் இருக்கின்றன. மேலும், இவர் பெரியளவில் வங்கி இருப்பும் வைத்திருக்கிறார்.

மஸ்ஸு

மஸ்ஸு என்கிற மாலனா எனும் இவர் மும்பை பகுதியில் பிச்சை எடுக்கிறார். தினமும் 1500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். பிச்சை எடுக்கும் இடத்திற்கு இவர் தினமும் ஆட்டோவில் தான் செல்கிறார். 8-10 மணி நேரம் வரை இவர் தினமும் பிச்சை எடுக்கிறார். அதே ஆட்டோவில் மீண்டும் வீட்டிற்கு சென்று விடுகிறார். இவரிடம் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதியா தேசி

இவருக்கு லைப் இன்சூரன்ஸ் எல்லாம் கூட இருக்கிறது. இவர் வருட வருடம் ப்ரீமியம் தொகையாக 36,000 ரூபாய் கட்டுகிறார். இவர் தினமும் 8-10 நேரம் பிச்சை எடுப்பது மூலமாக 300 - 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். வெளிநாடுகளுக்கு எல்லாம் இவர் சென்று வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண குமார்

மும்பையை சேர்ந்த கிருஷ்ண குமார் சி.பி டேன்க் பகுதியில் தான் அதிகம் பிச்சை எடுக்கிறார். தினமும் 1500 - 2000 வரை இவர் சம்பாதிக்கிறார். இவருக்கு சொந்தமான குடியிருப்பில் இவரது சகோதரர் உடன் தங்கியிருக்கிறார். 5 லட்சம் மதிப்பிலான சொத்து வைத்திருக்கிறார்.

லக்ஷிமி தாஸ்

60 வயதான லக்ஷிமி தாஸ் உடல் ஊனமுற்றவர். 16 வயதில் இருந்து இவர் கல்கத்தாவில் பிச்சை எடுத்து வருகிறார். போலயோ அட்டாக் ஆனவர். வேறு வழியின்றி தான் இவர் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இப்போது இவருக்கு பெரியளவில் வங்கி இருப்பு தொகை இருக்கிறது.

சிவாஜி

"ஏழை இன்னும், ஏழை ஆகிட்டே இருக்கான், பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிட்டே இருக்கான்."

யாரு ஏழை, யாரு பணக்காரன்...ஒரே குழப்பமா இருக்கு...

31509 total views