பப்பாளியை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அபாய உண்மைகள்!.. ஆண்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா...?

Report
344Shares

பப்பாளி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் தான். ஆனால் அதிகம் சாப்பிட்டால் ஆபத்து.

நச்சுத்தன்மை

பப்பாளி பல்வேறு ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருக்கிறது, ஆனால் மிக அதிகமாக சாப்பிட்டால் நச்சுத்தன்மையும் ஏற்படலாம். ஏனெனில் இதில் பென்சில் மற்றும் ஐசோடியோசனானேட் கலவை உள்ளது.

விந்தணு பாதிப்பு

பப்பாளியின் விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மூலப்பொருளானது, ஆண்களின் கருவுரும் தன்மையை பாதிக்கும். மேலும் இது விந்தணு இயக்கத்தையும் பாதிக்கும்.

இரத்த சர்க்கரை அளவு

பப்பாளி இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை உடையது. நீங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டி மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது பப்பாளியை சாப்பிடுவது அபாய நிலைக்கு தள்ளும்.

அலர்ஜி

பப்பாளிப்பால் பட்டால் அலர்ஜி உண்டாகும். எனவே பழுக்காத பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பாலூட்டும் தாய்மார்கள்

பப்பாளி இலைகள் மிகவும் பிரபலமான ஒன்று. இதில் பாப்பெயின் என்ற மூலப்பொருள் உள்ளது. இது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கிறது. மேலும் குழந்தை பிறப்பு குறைபாடுடன் பிறக்கவும் வாய்ப்புள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பப்பாளியை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதும், குழந்தை பிறந்த சில நாட்களுக்கும் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.

கருக்கலையும் அபாயம்

பப்பாளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் கூட, இதன் வேர் மற்றும் விதைகள் கருக்கலைப்பிற்கு காரணமாகின்றன. பழுக்காத பப்பாளி கருப்பை சுருக்கங்களுக்கு வழிவகுக்கும். கர்ப்பகாலத்தில் இந்த பழத்தை தவிர்த்துவிடுவது நல்லது.

10839 total views