உங்கள் ஆரோக்கியத்தை உதட்டின் நிறத்தை வைத்தும் கண்டறியலாம்....

Report
257Shares

ஒருவர் எவ்வாறு ஆரோக்கியமாகவும் உடலில் எந்த ஒரு பிரச்சனை இருக்கும் என்பதை அவர்களின் உதட்டின் நிறத்தை வைத்தும் அறியலாம்.

இயற்கையாக எல்லோருக்கும் இளம் சிவப்பு நிறத்தில் தான் உதடுகள் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு உடலின் பருவ காரணங்களால் உதட்டின் நிறம் வேறுபட்டு காணப்படும்.

சிவப்பு நிற உதடு - உடலில் அதிகமான உஷ்ணம், கல்லீரல் மற்றும் மண்ணீரலில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உதடுகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை சரி செய்ய தேனில் செவ்வந்தி மலர் கலந்தும், கசப்பான முலாம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது.

ஊதா நிற உதடு - ஊதா நிறத்திலுள்ள உதடுகளில் உடலில் சத்துக்கள் சீராக இல்லாமல் இருக்கும். அதற்கு பதப்படுத்திய உணவுகளை தவிர்த்து, உருளைக்கிழங்கு, கேரட், மீன்வகைகள் போன்றவைகளை சாப்பிட வேண்டும்.

கருப்பு நிற உதடு - கருப்பு நிறத்தில் உதடுகள் இருந்தால் அவர்களுக்கு உடல் சூட்டினால் செரிமான கோளாறுகள் இருக்குமாம். நார்ச்சத்துமிக்க உணவுகளும், எலுமிச்சை சாறு அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

சாம்பல் நிற உதடு - உதடு இளம் சிவப்பு, வெள்ளை, சாம்பல் போன்ற நிறத்தில் இருந்தால், அதற்கு அதிக குளிர்ச்சி, ரத்த சோகை குறைவு போன்ற பிரச்சனைகள் உள்ளது.

இந்த பிரச்சனையை போக்க இவர்கள் சூடான உணவை சாப்பிட வேண்டும். மேலும் விட்டமின் C மற்றும் இரும்பு சத்து கொண்ட பேரிச்சம்பழம், சிவப்பு இறைச்சிகள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

11000 total views