பல் சொத்தையா? தினமும் இருமுறை இதை பண்ணுங்கள்

Report
390Shares

இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, உணவு சாப்பிட்ட பின் வாயை நன்றாக கொப்பளிக்காமல் இருப்பது போன்ற காரணத்தினால் பற்கள் சொத்தையாகிறது.

பல் சொத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும்

தினமும் காலையில் நல்லெண்ணையை வாயில் ஊற்றி 1௦ நிமிடங்கள் ஆயில் புல்லிங் செய்து வந்தால் , பற்கள் சொத்தை ஆகாது.

இஞ்சி சாற்றை லேசாக சூடுபடுத்தி அதன் மூலம் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.

சுக்கு பொடியை பல் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தினால் வீக்கம் குறைந்து பல் வலி குணமாகும்.

பல்வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது குளிர்ச்சியான உணவை தவிர்த்து, கல்சியம் சத்துக்கள் மிக்க நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும்.

இரண்டு கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை வாயில் சில நிமிடங்கள் இருக்குமாறு செய்தால், வாயில் துர்நாற்றம் வராது.

ஐஸ் கட்டிகளை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து எடுத்தால், சிறிது நேரத்தில் பல் வலி மற்றும் வீக்கம் குறையும்.

மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 1௦ நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

தினமும் பல் துலக்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, வாய் கொப்பளித்து வந்தால் பல் சொத்தை வராது.

15384 total views