இரண்டு திருமணம் முடித்தும் தனிமையில் தவிக்கும் நடிகை சீதாவின் பரிதாபநிலை!! முதல் கணவரிடம் விடுத்த கோரிக்கை..?

Report
5150Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக சீதா ஒரு காலத்தில் வலம் வந்தார்.

இவர் நடித்த ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை என பல படங்கள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் படங்களாகும்.

இவருக்கு வயது வந்த மகள் உள்ளார். அவரது பெயர் அபிநயா. அபிநயா தற்போது தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் அபிநயா தன் அம்மாவை போல பெரிய திரையில் நடிக்க தயாராகி வருதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சீதாவிற்கும் நடிகர் பார்த்திபனுக்கும் கடந்த 1990ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். மேலும், கடந்த 2010ஆம் சீரியல் நடிகர் சதீஷ் ஷா வை திருமணம் செய்துகொண்டார் சீதா. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு இவரையும் பிரிந்துவிட்டனர் சீதா.

தற்போது, தனிமையில் இருக்கும் சீதா மீண்டும் தனது முதல் கணவர் பார்த்திபனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு பார்த்திபனிடம் கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு பார்த்திபன் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதேவேளை, யாரும் இன்றி சீதா தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது முதல் கணவரிடம் இருக்கும் தன் மகள்களை வந்து பார்த்து செல்கிறார் சீதா.

165552 total views