ரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம்

Report
595Shares

ரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இவர்களுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல்கள்; வெளியாகி உள்ளன. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோனே 2006-ம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.

ஒரு படத்துக்கு 9கோடி ரூபா சம்பளம் தீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள பத்மாவத் படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தீபிகா படுகோனே தனது 32-வது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடியதாகவும் இதில் ரன்வீர் சிங்கும் அவரது பெற்றோருடன் கலந்து கொண்டதாகவும் அப்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது

18187 total views