உடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்! தினமும் சாப்பிடுங்கள்

Report
1706Shares

இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை.

இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை.

எதிலும் வேகத்தை எதிர்ப்பார்க்கும் நாம் உணவையும் வேகமாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டோம். அப்படி தலைத்தூக்கியது தான் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நம்மில் பல பேர் இன்று உணர்ந்து கொண்டோம்.

அதற்கான மாற்றாக நமக்கு கிடைத்தது தான் ஓட்ஸ். துரிதமாக உண்ண வேண்டுமானால் இதனை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். நொடிப்பொழுதில் தயார் செய்து சாப்பிட்டு விடவும் செய்யலாம்.

ஓட்ஸ் என்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய காலை உணவாக விளங்குகிறது. இந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது.

மேலும் உங்கள் உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது.

ஓட்ஸ் உணவால் கிடைக்கும் உடல்நல பயன்களை ஊக்குவிக்க நட்ஸ், பழங்கள் அல்லது மசாலாக்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

ஒரு பௌல் ஓட்ஸில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைய உதவியாக இருக்கும். எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான ஓர் உணவுப் பொருள்.

72088 total views