முகப்பருவை தடுக்க ஆவி பிடித்தால் போதும்... எவ்வாறு தெரியுமா?

Report
176Shares

பொதுவாக சளி தொந்தரவு இருந்தால் ஆவி பிடிப்பது வழக்கம். ஆனால் இப்படி ஆவி பிடிப்பதன் மூலம் உங்கள் முக அழுக்குகள் நீங்கி பொலிவடையும் என்பது உங்களுக்கு தெரியுமா?

முகத்தில் உள்ள அழுக்குகளை எளிதாக விரட்ட, ஆவி பிடிப்பது சிறந்த வழி. ஆவி பிடித்து பின் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும்போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும்.

ஆவி பிடிப்பதால் முகப்பருக்களை குறைப்பதோடு, முதுமை தோற்றதையும் தடுக்கலாம்.

முகப்பரு

முகப்பரு இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்கவேண்டும். பின் 30 நிமிடம் ஒய்வு விட்டு, ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை குறைவதை காணலாம்.

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும்.

அதனால் சருமம் அழகாகவும், பொலிவுடனும் இருக்கும். எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.

ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். என்றும் இளைமையாக இருக்க ஆவி பிடிப்பது சிறந்த முறையாகும்.

7466 total views