படிப்பவர்களின் நெஞ்சை உருக்கும்...மாவீரன் நெப்போலியன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதம்! புகைப்படம்

Report
207Shares

வரலாற்றில் வீரர்களாக திகழ்ந்தவர்களின் வாழ்க்கையில் கட்டாயம் ஒரு சோகம் இருக்கும் .பலவற்றை இழந்து இருப்பார்கள் .அந்த வகையில் மாவீரன் நெப்போலியன் வரலாற்றில் கொடி கட்டி பறந்த வீரன் ,தன வீரத்தை வைத்து பல ராஜ்யங்களை வென்று வாகை சூடினாலும் வாழ்க்கையில் தோற்று விட்டார் .

1933-ஆம் ஆண்டு, லண்டனில், மாவீரன் நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள், 4000 பவண்டுக்கு விலை போனது. இந்த கடிதம் மூலம் மாவீரன் நெப்போலியனின் உண்மை காதல் எல்லோருக்கும் தெரிகின்றது .

ஐரோப்பியாவையே கதி கலங்கச் செய்தவர், நெப்போலியன். அவனை ஜோசப்பின் என்ற பெண், தேடிச் சென்று காதலித்தார். அப்போது நெப்போலியனுக்கு வயது 27.

ஜோசப்பினுக்கு, வயது 33. அவளுக்கு திருமணம் ஆகி, 2 மகன்கள் இருந்தனர். அவள் கணவனை, பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் கொன்று விட்டனர். அவள் பார்ப்பதற்கு, அழகாகவும் இருக்க மாட்டாள். ஆனால், நெப்போலியன் அவளைக் காதலித்தார். மூன்று மாதம் தொடர்ந்த அவர்களது காதல் திருமணத்தில் முடிவடைந்தது.

திருமணம் ஆன, இரண்டாவது நாளே, நெப்போலியன், படை திரட்டிக் கொண்டு, இத்தாலிக்குச் சென்று விட்டான். போர்க் களத்திலிருந்து, தன் காதல் மனைவி ஜோசப்பினுக்கு, காதலால் உருகி நான்கு கடிதங்கள் எழுதி அனுப்பினார்.

ஆனால், நெப்போலியன் அளவி்ற்கு, ஜோசப்பின் அவனை, ஆழமாகக் காதலிக்கவில்லை. அந்தக் கடிதம் வந்த சமயம் அவள் மற்றொருவனுடன் உல்லாசமாக இருந்தாள். இறுதியில், இந்தக் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.

ஆனாலும், நெப்போலியன் தன் காதலிக்கு எழுதிய காதல் கடிதங்கள், படிப்பவர்களின் நெஞ்சை உருக்கியது. அந்தக் காதல் கடிதங்கள் தான், பின்னாளில், அவனது மறைவிற்குப் பின்னால், லண்டனில் ஏலத்திற்குப் போனது.

8006 total views