ஒரு சொட்டு இரத்தம் இல்லாமல் செயலி மூலம் சக்கரை நோய்யை அறிய வேண்டுமா ?

Report
868Shares

காலம் காலமாக ரத்த பரிசோதனைக்கு விரல்களில் துளையிடும் வழக்கத்திற்கு மாற்றாக எபிக் ஹெல்த் என அழைக்கப்படும் இந்த செயலி அமைந்துள்ளது.

இந்த செயலி டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோய்களுக்கு பொருந்தும். செயலி இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் கேமரா லென்ஸ்-ஐ விரல் நுனியில் வைத்தால் இதய துடிப்பு, உடல் வெப்ப நிலை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை சில புகைப்படங்களை சார்ந்த தகவல்களை கொண்டு வேலை செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

வழக்கமான வழிமுறையை மாற்றும் புதிய வழிமுறை சோதனைக்கு தேவையான தகவல்களை பிரத்தியேகமாகவும், துல்லியமாகவும் சேகரிக்கிறது. என இந்த செயலியை கண்டறிந்த டாமினிக் உட் தெரிவித்துள்ளார்.

இந்த செயலி சர்க்கரை நோயினை முன்கூட்டியே கண்டறிய உதவுவதோடு, அனைவரையும் ஆரோக்கியமாக வாழ உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பாக, எபிக் ஹெல்த் செயலி இன்சுலின் ரெசிஸ்டண்ட் அளவுகளை துல்லியமாக கணக்கிடும் என்பதால் ஒருவருக்கு சர்க்கரை நோய் வர இருப்பதையும் இது தெரிவிக்கும்.

இதை ஒருவரின் நாடியை கணக்கிட்டு தெரிவிக்கிறது. இந்த செயலி ஒருவரின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைத்து, அதிகம் ஆபத்தான டைப் 2 சர்க்கரை நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவியாய் இருக்கும் என இதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்த செலி வரும் மாதங்களில் சோதனை செய்யப்பட்டு விரைவில் டவுன்லோடு செய்ய வெளியிடப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

23633 total views