கொடிய விஷமுடைய பாம்புகளை மயக்கி தூங்க வைக்கும் அதிசய மனிதர்!

Report
143Shares

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆடவர், உலகின் ஆபத்தான பாம்புகளை மயக்கித் தூங்க வைக்கிறாராம்...

29 வயது ரெஃப்பாயி கடந்த 5 ஆண்டுகளாக பாம்புகளைத் துயில வைத்ததில், அந்த ஊர்வனவற்றுடன் நெருங்கிய நட்புக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

13-க்கும் அதிகமான பாம்புகளை வைத்திருக்கும் அவர், பாம்பாட்டித் தொழில் எகிப்தில் பெருக வேண்டும் என விரும்புவதாகக் கூறினார்.

எகிப்தின் அரசியல் கொந்தளிப்பாலும், பயங்கரவாதிகளின் தாக்குதலாலும் அந்நாட்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

இப்போது அந்த நிலை மாறிவருகிறது. ஆகையால், பாம்பாட்டித் தொழில் மேம்படுவதற்கு இதுவே தக்க நேரம் என்று அவர் கூறினார்.

வால் பகுதியைப் பிடித்து பாம்பை முன்னும் பின்னும் இசைக்கேற்றவாறு அசைத்து தனது சாகசத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.

பாம்பின் கண்களை நேரே பார்த்து தனது நெற்றியால் அதன் தலையைத் தொட்ட பின், தரையில் அமர்த்துவது அவரின் வழக்கம்.

அனைத்துலக அளவில் தன்னோடு சேர்ந்து மற்ற எகிப்தியர்களும் பாம்புகளை மயக்கும் கலையை வெளிப்படுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

6093 total views