ஆண்களுக்கு இந்த மாதிரி பெண்களை ரொம்ப பிடிக்குமாம்!

Report
1278Shares

மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு தலையில் மல்லிகைப்பூ என மங்களகரமாய், இயற்கை அழகோடு இருக்கும் பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர்.

அளவிற்கு அதிகமாக மேக் அப் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, லிப்ஸ்டிக் போட்டிருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஆடை விஷயத்திலும் கண்களை உறுத்தாத எளிமையான உடை அணிந்த பெண்களையே ஆண்கள் விரும்புகின்றனர். இயற்கை நிறத்தை வெளிப்படுத்தும் முகமும், எளிமையான உடையும் அணிந்த பெண்களே ஆண்களின் மனதில் இடம் பிடிக்கின்றனராம்.

மனதின் அழகை வெளிப்படுத்துவதில் பெண்களின் கண்களுக்கு தனி இடம் உண்டு. இயற்கையான அழகை வெளிப்படுத்தும் காந்தம் போன்ற கண்களைக் கொண்ட பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம். எனவே கண்களுக்கு அளவுக்கு அதிகமான மை தீட்டி ஆண்களை பயமுறுத்துவதை தவிர்க்கவேண்டும்.

அதேசமயம் கண்ணுக்கு மை இல்லாமலும் இருக்கக்கூடாது. அது முகத்தையும் சேர்த்து பொலிவிழக்கச் செய்யும்.அதேபோல் அடிக்கும் அளவுக்கு அதிகமாக லிப்ஸ்டிக் போடாமல் சாதாரணமாக லிப் கிளாஸ் உபயோகிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் நிறைந்த இயற்கை அழகான பெண்களே ஆண்களை கவர்கின்றனர். எனவே மேக் அப் போட்டு போனால்தான் அனைவரையும் கவரமுடியும் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம்.

பெண்கள் தங்களின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாகச் சென்றாலே ஆண்களுக்கு பிடிக்கும் என்பது தான் உண்மை.

49148 total views