66 ஆண்டுகளுக்கு பிறகு நகம் வெட்டும் கின்னஸ் சாதனையாளர்!.. தீயாய் பரவும் காணொளி

Report
381Shares

நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்த இந்தியரான ஸ்ரீதர் சில்லால், 66 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் நகம் வெட்டியுள்ளார்.

மஹாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். கடந்த 1952ஆம் ஆண்டு முதல் தனது இடது கை நகத்தை வெட்டாமல் இருக்கும் இவருக்கு தற்போது 88 வயது.

கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கை விரல்களில் நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி 909.6 சென்டிமீட்டர்.

இதில் இடது கை கட்டை விரல் நகத்தின் அளவு மட்டும் 197.8 சென்டி மீட்டர். இதன் காரணமாக, உலகிலேயே ஒரு கையில் மட்டும் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

12975 total views