இறுதிச் சுற்றில் வெற்றிபெற்று ஆர்யாவிற்கு ஜோடியாவது யார்?.. வெளியே கசிந்த ரகசியம்

Report
4189Shares

பிரபல நடிகர் ஆர்யா பிரபல ரிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலமாக தனக்கு ஏற்ற ஜோடியை தெரிவு செய்ய காத்திருக்கிறார்.

16 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது மூன்று பெண்கள் உள்ள நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

சுசானா, அகதா, சீதாலட்சுமி இவர்கள் மூன்று பேரில் யாரை திருமணம் செய்யப் போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் சுசானாவை திருமணம் செய்யவுள்ளதாகவும், அதனால் தான் அவரது மகனிடம் ஆர்யா பழகியுள்ளதாகவும் கூறப்பட்டது.

அதன்பின்பு ஆர்யா அகதாவை தாஜ்மஹால் வரை கூட்டிச் சென்றதால் அவரைத் திருமணம் செய்வதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதுவரை ஒரு டோக்கன் ஆப் லப் வாங்காத சீதாலட்சுமி திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்குக் காரணம் என்னவென்றால் இறுதிக்கட்டத்தில் வெற்றியாளரை தெரிவு செய்யும் மற்ற இருவர்களின் மனநிலையினை தற்போதே சமாதானப்படுத்தி வைக்க வேண்டும் என்பதால் ஆர்யா எல்லோரிடமும் வெற்றி பெறவிருப்பது யார் என்பதைக் கூறிவிட்டாராம்.

இத்தகவலை அகதா தனது தோழி ரியாவிடம் கூற அவர், ஆர்யா லவ் சகாதா என்ற பக்கத்தினை ஆரம்பித்து இருவரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். தற்போது அந்த பக்கத்தில் ஆர்யா அகதாவினை திருமணம் செய்யவில்லை என்றும் சீதாலட்சுமியை தான் திருமணம் செய்யவுள்ளதாகவும், தனக்கு யார் ஜோடி என்பதை ஆர்யா முடிவு செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத நிலையில் நாளைய தினத்தில் நடக்கும் இறுதிச் சுற்றினை அவதானிக்க மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

131944 total views