டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவா இது? வைரலாகும் வீடியோ!

Report
228Shares

சமையல் என்பது ஒரு கலை தான், அந்த கலைக்கு ஆண் பெண் பேதம் இல்லை. ஆனால் ஒரு குடும்பம் என்று வருகையில் சமையல் என்னும் இலாக்கா பெரும்பாலும் பெண்களுக்கே ஒதுக்கி விடப் படுகிறது!

அதற்கு நம் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மட்டும் விதிவிலக்கா என்ன?...

இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த விளையாட்டு ஜோடிகள், பின்னர் வாழ்க்கையிலும் இணைந்த காதல் ஜோடிகலான ஹொயிப் மாலிக் மற்றும் சானியா மிர்ஸா ஜோடியின் சமீபத்திய விளம்பரம் ஒன்று தான் நெட்டீசன்களின் தற்போதைய தீனி.

பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் பிரபல நெய் நிறுவனம் ஆனது தனது விளம்பரம் ஒன்றினை இந்த காதல் ஜோடியை கொண்டு உருவாக்கியுள்ளது. இந்த விளம்பரத்தில் தன் கணவரின் மீது அக்கரை உள்ள மனைவியாகவும், பொறுப்பான குடும்ப தலைவியாகவும் சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் டென்னிஸ் மைதானங்களின் இடையில் தென்பட்ட நம் சானியா இந்த விளம்பரத்தில் சமையல் செய்துகொண்டு இருப்து போல் காட்சியளிக்கின்றார்.

இந்த விளம்பரத்தினை கண்ட அவரது ரசிகர்கள் பலரும், தங்களது கருத்துக்களை விமர்சணங்களாக வைத்து வருகின்றனர். என்ற போதிலும் இந்த விளம்பரம் குறித்து தனது ட்விட்டர் பதிவின் மூலமாக கருத்து தெரிவித்துள்ள சானியா...

இந்த விளம்பரத்தில் வரும் சித்தரிப்பிற்கு என் மனம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை, மகளிர் தினத்தில் மட்டும் பெண்களுக்கான போற்றுதல் கிடைக்கின்றது என பலர் கூறும் போதிலும், அதை மறுக்க என் மனம் முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.

6501 total views