மகளின் பள்ளியில் அஜீத்திற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்... கண்டுகொள்ளாத 'தல'யின் வைரல் காட்சி

Report
2049Shares

நடிகர் அஜித், இயக்குனர் சிவாவின் கூட்டணி 4வது முறையாக இணையும் படம் விசுவாசம். இவர்களது கூட்டணியில் உருவான `வீரம்', `வேதாளம்', போன்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா படிக்கும் பாடசாலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.

மிகப்பெரிய பைக் ரேசர் என அனைவராலும் புகழப்பட்ட நடிகர் அஜித், தன்னுடைய மகளுக்காக டயர் ஓட்ட சிரமப்படும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்போது , தந்தை டயர் ஓட்ட சிரமப்படுவதை பார்த்து மகள் அனோஷ்காவும் சிரிக்கிறார்.

எனினும், எதையும் பொருட்படுத்தாத அஜித் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றார். மேலும், அங்கு அஜித் சாதாரண ஒரு மனிதரைப் போல எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருந்தது, அனைவரது மத்தியிலும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

62163 total views