நமீதா ஏன் 100 வது நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை? உண்மை காரணம் இதோ...

Report
1297Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாளில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். ஆனால் நமீதா கலந்து கொள்ளவே இல்லை. அவருக்கு அன்று முக்கிய வேலை இருந்ததால் வரமுடியவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது அவர் கலந்துக் கொள்ளாததன் உண்மை காரணம் தெரியவந்துள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் ஓவியாவை ஓரம் கட்டினர். அதில் நமீதாவும் ஒருவர்.

நமீதா ஓவியாவை படுகேவலமாக திட்டி இருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு ரசிகர் வட்டம் இன்னும் அதிகரித்து இருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஆனால் அவர் எதிர்பார்ப்பு மாறாகவே எல்லாம் நடந்தது. செல்லும் இடமெல்லாம் ஓவியா ரசிகர்கள் பிடி பிடி என பிடித்து கொண்டனர். இந்த நிலையில் 100 நாளில் கலந்து கொண்டால், அங்கு ஓவியாவுக்குதான் ரசிகர்களின் வரவேற்பு இருக்கும். தன்னை ஓவியா ரசிகர்கள் கேவலப்படுத்தி விடுவார்கள் என்று நினைத்துதான் வரவில்லை.

அதுமட்டும் அல்லாமல் 100வது நாளில் கலந்து கொள்ளாவிட்டால் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்ற விதிமுறை இருந்தது.

ஆனாலும் பணம் போனால் போகட்டும் மானம்தான் முக்கியம் என்று அவர் பிக்பாசின் 100வது நாளில் கலந்து கொள்ளவில்லை. தற்போது தீபாவளி ஸ்பெஷலிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.

47468 total views