என்னவோ தெரியல, அந்த ஒரு நிமிஷம் கண்கலங்கிடுச்சு.. ஹரீஷ் அம்மா

Report
243Shares

பிக்பாஸில் இப்போதிருக்கும் போட்டியாளர்களில் ஹரீஷ் கல்யாணும் ஒருவர். சமீபத்தில் உள்ளே சென்று அவரை அவரது அப்பா கல்யாணும், அம்மா கௌசல்யாவும் சந்தித்தனர்.

இப்போது அது பற்றி பத்திரிக்கையில் அவர் பேட்டி கொடுத்துள்ளார். ஹரீஷ் எங்களுக்கு ஒரே பையன். இப்போ அவன் எங்க கூட இல்லாதது கஷ்டமா தான் இருந்தது. எங்க வீடு எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்டா தான் இருக்கும்.

சின்ன வயசுல இருந்து சினிமா கலைஞர்கள பார்த்தே தான் வளர்ந்தான். எல்லாத்தையும் எங்களோட ஓபனா பேசுவான். அவன படிக்க வைக்க இஞ்சினியரிங் சேர்த்து விட்டோம்.

அவனுக்கு செட் ஆகாததால விஸ்காம் படிக்க வச்சோம். நிறைய போராடி தான் சினிமாக்குள்ள வந்தான். பிக்பாஸ் நிகழ்ச்சிய விடாம பாத்திட்டு இருந்தான். ஒரு நாள் உள்ள போகப்போறேன்.

உள்ள கத்துகிற விசயங்கள் எனக்கு சினிமா கேரியருக்கு பயன்படும்னு சொன்னான். நம்பிக்கையோட அனுப்பி வச்சோம். முதல் எல்லாரோடையும் ஒத்துபோறது கொஞ்சம் சிரமமாயிருந்தாலும், அப்பறம் நல்ல பழக ஆரம்பிச்சுட்டான். அவன் வீட்ல இல்லாம தூக்கம் கூட வரல.

இப்போது பிக்பாஸ்ல அவன பாத்ததும் சந்தோசமா இருக்கு. போனவாரம் போனோம். கிடைச்சிருக்கிற கொஞ்ச நேரத்திலயும் எல்லாருடனும் பேசினோம். சந்தோசமாக இருந்துச்சு. ஃப்ரீஸ்ல இருந்தாலும் முத்தம் கொடுமானு அவன் கேட்டதும் கண்கலங்கிடுச்சு என அவர் கூறியிருக்கிறார்.

8043 total views