பறக்கும் பாறைகளா?... இதற்கு பின்னால் இருக்கும் உண்மை தெரியுமா?

Report
316Shares

இது உண்மையில் பறக்கும் பாறைகள் தானா இல்லை வேறு எதாவது ஓன்றா? என்ற சந்தேகம் எல்லோரது மனதிலும் எழும். ஆனால், உண்மையை சொல்ல போனால் இல்லை. இந்த புகைபடத்தில் நீங்கள் காணுவது ஒரு அரிய வகை புகைப்படமே ஆகும்.

ஆம், லண்டனை சேர்ந்த புகைப்படக் கலைஞரான சேவிட்க்வெண்டின் என்பவர் தான் இத்தகைய அரிய படங்களை எடுத்துள்ளார்.

வானத்தை நோக்கி கற்களை வீசி எரிந்து அவை எப்படித் தோன்றுகிறது என்பதைப் பார்ப்பதற்காக முதலில் புகைப்படம்எடுத்த அவர் பின்பு பிரிட்டன் முழுவதும் பல இடங்களில் இப்படி கற்களையும், கூழாங்கற்களையும் வானத்தில் எறிந்து படமெடுத்து தொகுப்பாக்கியுள்ளார்.

இந்தப் படங்கள் அனைத்தும் “Photoshop” செய்யப்பட்டிருக்கும் அன பலர் நினைக்கின்றனர். ஆனால் இல்லை என்று மறுத்த இவர் தானே வானத்தை நோக்கி கல்லை வீசுவேன் அல்லது அருகில் இருக்கும் நண்பனை வீசச் சொல்லுவேன். கல் வானத்தில் பறக்கும் போது புகைப்படம் எடுத்துவிடுவேன் என்கிறார்.

இப்படி புகைப்படம் எடுக்க அவர் பயன்படுத்தும் யுக்தியாய் கூறுவதாவது, கமெராவில் ஷட்டரின் வேகத்தை அதிகரித்தால் அந்தரத்தில் கல் அப்படியே நிற்பது போல தோற்றம் பெற்றுவிடும். மேலும், அபர்ச்சரை` குறைவாக வைத்துக் கொண்டால் புகைப்படம் தெளிவாக இருக்கும் என்கிறார்.

- BBC - Tamil
10178 total views